இன்று வீடு திரும்பும் தனிமைப்படுத்தலுக்குள்ளான 60 பேர்
தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள சிலர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.
இன்றைய தினம் 60 பேர் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வௌியேறவுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்களில் 15 பேர் வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் என்பதுடன், அவர்கள் கல்கந்த புனானை தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, பண்டாரகம பகுதியிலுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.
இதனை தவிர, நீர்கொழும்பு வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் 25 பேரும் இன்று தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வௌியேறவுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆயிரத்து 506 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment